Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயலுக்கே சுவர் கட்டுறீங்களா? வொர்க் அவுட்டே ஆகாது! – ட்ரம்ப் கலாய்!

Webdunia
ஞாயிறு, 19 ஜனவரி 2020 (11:30 IST)
நியூயார்க் நகரில் புயலை தடுக்க சுவர் கட்டுவது தேவையற்ற வேலை என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் பிராந்தியம் அடிக்கடி பெரும் புயலை சந்தித்து வருவதால் புயலை தடுப்பதற்காக பெரும் பொருட்செலவில் மிகப்பெரும் சுவர் அமைக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் கட்டப்பட இருக்கும் இந்த சுவரானது 25 ஆண்டுகள் கழித்தே முழுமை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த திட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்பே கேலி செய்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் நியூயார்க்கில் சுவர் எழுப்புவது தேவையற்ற வேலை என்றும், இயற்கைக்கு முரணானது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மிகுந்த பொருட் செலவில் ஆண்டு கணக்கில் உருவாக்கப்படும் இந்த சுவரால் பெரிய உபயோகம் இருக்காது. பார்க்கதான் பிரம்மாண்டமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பதவியேற்றபோது மெக்ஸிகோ – அமெரிக்க எல்லையில் சுவர் எழுப்புவதில் பிடிவாதமாக இருந்த ட்ரம்ப் தொடர்ந்து சுவர் எழுப்பும் பணியில் நிதி நெருக்கடியை சந்தித்தார். அது தேவையற்றது என பலர் கூறியபோது ட்ரம்ப் அதில் விடாபிடியாக இருந்தார். தற்போது அவர் நியூயார்க் சுவர் தேவையற்றது என கூறியிருப்பதை அமெரிக்க நெட்டிசன்ஸ் கிண்டல் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments