பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான், கைபர் மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது என்றும் ஆள் கடத்தல் போன்ற குற்றங்கள் அதிகமாகி வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு பயணிகளை துப்பாக்கி முனையில் கடத்தப்படுவது அதிகரித்து உள்ளதால் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான், கைபர் ஆகிய மாகாணங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அங்கு செல்ல வேண்டிய பயணம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.