உக்ரைன் போர் குறித்த போலி வீடியோக்கள்: ஆதாரத்துடன் கூறிய பிபிசி!
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகள் இடையே நடைபெற்று வரும் போர் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் இந்த வீடியோக்களில் ஒரு சில போலியான வீடியோக்கள் என பிபிசி ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது
கடந்த 2020ஆம் ஆண்டு ரஷ்யா போர் பயிற்சி செய்த போது எடுத்த வீடியோவை உக்ரைன் மீது படையெடுக்கும் வீடியோவாக ஒரு சிலர் தவறாக பதிவு செய்துள்ளனர் என்றும் இந்த வீடியோவை ஒரு சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு வருகின்றன என்றும் ஆனால் இது உண்மை அல்ல என்றும் பிபிசி ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது
இதே போன்று ஏராளமான வீடியோக்களும் புகைப்படங்களும் அதற்கு முன்பு நடந்த போர் மற்றும் போர் பயிற்சிகளின்போது எடுத்தது என்றும் கூறப்பட்டு வருகிறது