இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த மாதம் 29 ஆம் தேதி இந்தோனிஷியாவில் உள்ள சுலாவேசி தீவில் ரிக்டர் அளவில் 7.5 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது.
நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் வீடுகள், கடலோர குடியிருப்பு பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து விழுந்தது.
வீடுகளை இழந்த மக்கள் முகாம்கலில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். தற்போது மேலும் பாதிப்பில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும், போலீஸாரும் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் 2000 பேர் உயிரிழதனர். மேலும் 5000க்கும் மேற்பட்டோர் காணவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே ஜவா மற்றும் பாலி தீவுகளில் இன்று மீண்டும் ரிக்டர் அளவில் 6.0 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.