ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஜப்பான் நாட்டில் சற்று முன் மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட்டதாகவும் இது ரிக்டர் அளவில் 7.4 என பதிவாகியுள்ளதாகவும் தெரிகிறது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கடற்கரை ஓரமுள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னால் இந்தோனேசியா நாட்டிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் சுனாமி வரவில்லை என்பதால் அந் நாட்டு மக்கள் நிம்மதி அடைந்தனர்.
அதேபோல் ஜப்பான் நாடும் தப்பிக்குமா அல்லது சுனாமியால் மீண்டும் பாதிக்கப்படுமா என்பதை இன்னும் சில மணி நேரத்தில் பொறுத்திருந்து பார்க்கலாம்