ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 1,150 ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் 22 ஆம் தேதி காலை ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அன்று காலை முதல் கட்டமாக 250 பேர் வரை நிலநடுக்கத்தால் உயிரிழந்தனர் என்று தகவல் வெளியானது. அதன்படி 920 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பாக்திகா என்ற பகுதியில் தான் உயிரிழப்பு அதிகமாக இருந்துள்ளதாக தெரிகிறது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் இருந்து உள்ளதால் இடிபாடுகளுக்கிடையே இன்னும் அதிக நபர்கள் இருக்கலாம் என்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 1,150 ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சுமார் 1,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.