டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதை கிடப்பில் போட்ட எலான் மஸ்க் மீது டிவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க எலான் மஸ்க் முடிவு செய்திருந்த நிலையில் திடீரென அந்த முடிவை அவர் கைவிட்டார். இதனை அடுத்து மீது டுவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் எலான் மஸ்க் மீது வழக்கு தொடுத்துள்ளது. இதுகுறித்து எலான் மஸ்க் இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது மேலும் மேலும் பிரச்சனையை அதிகப்படுத்த வேண்டாம் என எச்சரிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இப்போது நீதிமன்றத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்த்துள்ளார். இது சம்மந்தமாக 164 பக்க ஆவணத்தை நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்துள்ளாராம். இதனால் பிரச்சனை இப்போது அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது.