உலக பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்திற்கு வந்துள்ளார் எலான் மஸ்க்.
டெஸ்லாவின் பங்கு அதிவேக வளர்ச்சியில் செல்வதால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பும் உயர்ந்து கொண்டு செல்கிறது. கடந்த ஆண்டு மட்டும் டெஸ்லாவின் பங்குகள் 743 சதவீதம் உயர்ந்துள்ளது.
அந்த வகையில், எலான் மஸ்கின் சொத்து மதிப்பு நியூயார்க்கில் நேற்று காலை 10.15 மணிக்கு 188.5 பில்லியன் டாலராக இருந்தது. இது அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசைவை விட 1.5 பில்லியன் டாலர் அதிகமாகும்.
இதன் படி கடந்த சில வாரங்களாக உலக பணக்காரர்கள் வரிசையில் இவர் இரண்டாவது இடத்தில் இருந்த இவர் தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்திற்கு வந்துள்ளார்.
ஜெப் பெசோஸ் கடந்த 2017 அக்டோபர் மாதம் முதல் உலக பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகித்துவந்தவர் என்பது கூடுதல் தகவல்.