உலக அளவிலான நம்பர் 1 பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் முதன்முதலாக காலடி எடுத்து வைத்துள்ளார்.
ப்ளூம்பெர்க் அமைப்பு ஆண்டுதோறும் பில்லியனர்ஸ் தொழிலாளர்களின் நிறுவன மதிப்புகள், செயல்பாடுகளை கொண்டு உலகின் டாப் 500 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் முதலிடம் வகித்து வந்தார்.
இந்நிலையில் அவரை இரண்டாம் இடத்திற்கு தள்ளி முதன்முறையாக எலான் மஸ்க் முதலிடம் பிடித்துள்ளார். டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி தனியார் ஆய்வகம் என பல நிறுவனங்களை நடத்தி வரும் இவர் சமீபத்தில் நாசா வீரர்களை தனது விண்கலம் மூலம் விண்வெளிக்கு அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் 2030க்குள் மக்களை செவ்வாய் கிரகம் அழைத்து செல்வது போன்ற செயல்திட்டங்களில் ஸ்பேஸ் எக்ஸ் பணியாற்றி வருகிறது.