டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க் தனது மகனுக்கு சந்திரசேகர் என்று பெயர் வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்
சமீபத்தில் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அமெரிக்கா சென்றிருந்தபோது டெஸ்லா உரிமையாளர் எலான் மாஸ்க் அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது நடந்த உரையாடல் குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
எலான் மஸ்க் தனது மகனுக்கு சிவோன் சந்திரசேகர் ஜிலேஸ் என்ற பெயர் வைத்துள்ளதாகவும் நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானியான பேராசிரியர் சந்திரசேகர் தன்னை மிகவும் கவர்ந்தவர் என்பதால் அவரது பெயரை தனது மகனின் பெயரின் நடுவில் வைத்துள்ளதாக கூறியதாகவும் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
1983 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சந்திரசேகர் பெயரை அப்போதே பலர் இந்தியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் எலான் மஸ்க்கும் தனது மகனுக்கு இந்திய விஞ்ஞானியின் பெயரை வைத்துள்ளது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது