Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ChatGPT-க்கு போட்டியாக, xAI நிறுவனம்.. எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு..!

ChatGPT-க்கு போட்டியாக, xAI நிறுவனம்.. எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு..!
, வியாழன், 13 ஜூலை 2023 (09:39 IST)
AI என்ற செயற்கை தொழில்நுட்பம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது என்பதும் குறிப்பாக ChatGPT என்ற தொழில்நுட்பம் முன்னணி நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. கூகுள்  உள்பட பல நிறுவனங்கள் தற்போது செயற்கை தொழில்நுட்ப நிறுவனத்தை அறிமுகம் செய்து வருகிறது. 
 
இந்த நிலையில் ChatGPTக்கு போட்டியாக xAI என்ற புதிய நிறுவனத்தை உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் எந்த அளவுக்கு ChatGPTக்கு  போட்டியாக இருக்கும் என்பது போகப்போகத்தான் தெரியும். 
 
இருப்பினும் எலான் மஸ்க்கின் இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விலை குறைந்த தக்காளி; மக்கள் நிம்மதி பெருமூச்சு! – இன்றைய விலை நிலவரம்!