இங்கிலாந்தில் வாழும் இளம் பெண் ஒருவர் அறிவுரை கூறியே மாதம் கோடி கணக்கில் சம்பாதித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
இங்கிலாந்து சேர்ந்த ரோமா என்ற இளம் பெண் புதிதாக குழந்தை பெற்றவர்களுக்கு ஆலோசனை மையம் நடத்தி வருகிறார். குழந்தை பிறந்த பின்பு குழந்தையை தூங்க வைப்பது? எப்படி தாய்ப்பால் முறையாக கொடுப்பது? சத்தான உணவை குழந்தைகளுக்கு தயாரிப்பது எப்படி? குழந்தைகள் சாப்பிட அடம்பிடித்தால் எப்படி சாப்பிட வைக்க வேண்டும்? புத்திசாலி குழந்தைகளாக எப்படி வளர்க்க வேண்டும்? குழந்தைகளிடம் எப்படி அணுக வேண்டும்? பேச வேண்டும்? பழக வேண்டும்? போன்று தகவல்களை அவர் கொடுக்கிறார்
பெற்றோர்களிடம் ஒரு மணி நேரம் கவுன்சிலிங் செய்ய 40 ஆயிரம் ரூபாய் அவர் வசூல் செய்வதாகவும் இதனால் அவர் ஒரு மாதத்திற்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கணினி துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கூட சம்பாதிக்க முடியாத பணத்தை வெறும் அறிவுரை கூறிய சம்பாதிப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.