லண்டனில் ரோலர் கோஸ்டர் ராட்டினமொன்று செங்குத்தாக மேலே எழும்பும்போது தொழில்நுட்ப கோளாறால் அப்படியே நின்று விட்டதால் பயணிகள் 100 அடி உயரத்தில் மாட்டிக்கொண்டனர்.
லண்டனில் உள்ள ஸ்டஃபோர்ட்ஷையர் பகுதியில் உள்ளது பிரபலமான ஆல்டோன் டவர்ஸ் தீம் பார்க். இன்று வழக்கம்போல மக்களை ஏற்றிக்கொண்டு ரெய்டுக்கு புறப்பட்ட ரோலர் கோஸ்டர் செங்குத்தாக மேலெலும்பியது. 100 அடி உயரத்தை அடைந்த ராட்டினம் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் செங்குத்தாக அப்படியே நின்று விட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலற தொடங்கினார்கள்.
உடனடியாக விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள் மக்களை ராட்டினத்திலிருந்து பெரும் முயற்சிக்கு பிறகு மீட்டனர். கிட்டதட்ட 20 நிமிடங்கள் மக்களை அதிலிருந்து வெளியேற்ற ஆனது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அதற்குள் ராட்டினம் மீண்டும் கீழ் நோக்கி போகாமல் இருந்தது.
ராட்டினம் மேலே மாட்டிக்கொண்டதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஒருவர் அதை வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.