பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவு ஒன்றிற்கு பயணித்துக் கொண்டிருந்த கப்பல் ஒன்று நடுக்கடலில் தீப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டை சுற்றி சில தீவுகள் உள்ள நிலையில் அத்தீவுகளை சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் கப்பல்களில் பயணம் செய்கின்றனர். இதற்காக பல சிறிய ரக கப்பல் சேவைகளும் பில்லிப்பைன்ஸ் நாட்டில் உள்ள நிலையில் அவற்றின் பராமரிப்பு தரம் மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டுகளும் உள்ளன.
இந்நிலையில் பிலிப்பைன்ஸில் உள்ள சிக்விஜோர் பகுதியில் இருந்து போஹோல் மாகாணத்திற்கு 120 பயணிகள் மற்றும் சில பணியாளர்களுடன் புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்த எஸ்ப்ரென்சா ஸ்டார் என்ற சொகுசு கப்பல் அதிகாலை நேரத்தில் நடுக்கடலில் திடீரென தீப்பற்றியுள்ளது.
செய்தியறிந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடம் விரைந்து பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்கள் குறித்த தகவல்கள் தெரிய வரவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.