சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற கப்பல் சிக்கிக்கொண்ட விவகாரத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு வேண்டும் என சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சூயஸ் கால்வாய் சமீபத்தில் எவர்கிரீன் என்ற வணிக கப்பல் சிக்கிக் கொண்டது. இதன் காரணமாக வெளிநாட்டிலிருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் அழைக்கப்பட்டு நவீன இயந்திரங்கள் மூலம் அந்த கப்பல் மீட்கப்பட்டது
இந்த நிலையில் சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்கிக் கொண்ட காரணத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வேண்டும் என சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி ஒபாமா ரபீ என்பவர் தெரிவித்துள்ளார்
கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கான சம்பளம், பயன்படுத்த கருவிகளுக்கான செலவுகள், கால்வாயில் ஏற்பட்டுள்ள சேதம், இழுவை படங்களுக்கான செலவுகள், வணிக ரீதியில் ஏற்பட்ட நஷ்டம் என அனைத்தையும் சேர்த்து ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கொடுக்க வேண்டும் என எகிப்து கேட்டுள்ளது
ஆனால் எவர்கிரீன் கப்பல் நிறுவனத்தின் தலைவர் இதுகுறித்து கூறியபோது நஷ்ட ஈடு தொகையை நாங்கள் வழங்க வாய்ப்பு இல்லை என கூறி உள்ளார்.