Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இம்ரான் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ராஜினாமா!

Webdunia
வியாழன், 25 மே 2023 (19:14 IST)
இம்ரான் கானின் தெஹ்ரீக்  - இ  - இன்சாப் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
 

பாகிஸ்தான் நாட்டில்,  கடந்த 9 ஆம் தேதி ஊழல் வழக்குத் தொடர்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நீதிமன்ற வளாகத்தில் வைத்து ரேஞ்சர் படையினர் கைது செய்தனர்.
அதன்பின்னர்,  நீதிமன்ற உத்தரவுப்படி, இம்ரான் கான் விடுக்கப்பட்டார்.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கட்சியினர்( தெஹ்ரீக்  இ  இன்சாப்)  போராட்டம் நடத்தினர். இது வன்முறையகி அந்த நாட்டின் பொதுச்சொத்துகள் சேதப்படுத்தியதாக இம்ம்ரான் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த விசாரணை   நடைபெற்று வரும் நிலையில், அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர், இம்ரான் கானின் தெஹ்ரீக் - இ  -இன்சாப் கட்சியை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அமைச்சரவையில்,  அமைச்சராக இருந்த ஷரீன் மசாரி தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து, அக்கட்சியைச் சேர்ந்த மற்றொரு  முன்னாள் மந்திரி பவாத் சவுத்ரி தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இவர் இம்ரான் கான் ஆட்சியில் தகவல்- ஒளிபரப்புத்துறை மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் ஆவார்.

கட்சிப் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள இவர், அரசியலைவிட்டு விலகப்போவதாகவும் தகவல் வெளியாகிறது. இதனால், அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிண்டி கலைஞர் நூற்றண்டு மருத்துவமனை மருத்துவருக்கு கத்திக்குத்து.. ஒருவர் கைது..!

இந்த சமூகத்தில் விவாகரத்து பெற கணவருக்கு லட்சக்கணக்கில் பெண்கள் பணம் கொடுப்பது ஏன்?

திருவொற்றியூர் பள்ளியில் வாயுக்கசிவு விவகாரம்: மாணவிகளின் நாடகமா?

நாடு முழுவதும் மாணவ, மாணவிகளுக்கு தனி அடையாள அட்டை.. பணிகள் தொடக்கம்..!

தமிழகத்தை நெருங்குகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு: 17 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments