சவுதி அரேபியாவின் உள் விவகாரங்களில், கனடா அரசு தலையிட்டதால் சவுதி அரேபிய அரசு கனடா அரசுடனான உறவை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டது.
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகனும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார, சமூக சீர்திருத்தங்களை அமல்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சவுதி அரேபிய பெண்கள் உரிமைக்காக போராடிய சமர் பேடாவி கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து பேசிய கனடா அமைச்சகம், சவுதி அரேபிய பெண்கள் தங்கள் உரிமைக்காக போராடுகின்றனர். அவர்களை அரசு கைது செய்வது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என கனடா அரசு கூறியிருந்தது.
இந்நிலையில் கனடா சவுதி அரேபியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதால் கனடாவுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் முடக்க இருப்பதாக சவுதி அரேபியா அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
இதனையடுத்து சவுதி அரேபிய அரசு கனடாவில் உள்ள சவுதி தூதரை திரும்ப அழைத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.