Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவை அடுத்து ஈரான்: இந்தியா எடுத்த அதிரடி முடிவு

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (09:14 IST)
சீனாவிலுள்ள வூகான் என்ற மாகாணத்தில் சமீபத்தில் கொரொனா வைரஸ் பரவ ஆரம்பித்து அம்மாகாணம் மட்டுமின்றி சீனா முழுவதும் இந்த வைரஸ் பரவி சுமார் 2000க்கும் அதிகமான உயிர்களை பலிவாங்கியது. அதுமட்டுமின்றி சுமார் 5000 பேர் இந்த வைரஸால் தாக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சீனா மற்றும் என்று சீனாவின் அண்டை நாடுகளிலும் கொரொனா வைரஸ் பரவி உயிர்களை பலிவாங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சீனாவை அடுத்து ஈரானிலும் கொரொனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டு வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
குறிப்பாக ஈரான் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் ஈரான் நாட்டில் துணை அதிபருக்கும் கொரொனா வைரஸ் தாக்கம் இருப்பதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஈரானில் இதுவரை கொரொனா வைரஸ் பாதிப்பால் சுமார் 8 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சீனாவிற்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் விமான சேவையை ரத்து செய்துள்ளது. கொரொனா வைரஸ் பிரச்சனை முடிந்த பின்னர்தான் விமான சேவை தொடரும் என தெரிகிறது. இந்த நிலையில் சீனாவை அடுத்து இரான் நாட்டிற்கும் விமான சேவையை ரத்து செய்வதாக இந்திய விமானத்துறை அதிரடியாக முடிவு செய்துள்ளது. எனவே ஈரான் நாட்டிற்கும் இன்னும் ஓரிரு நாட்களில் விமான சேவையை ரத்து செய்யப்படும் என கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments