அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் சாண்டா ரோசா நகரத்தில் தொடரும் காட்டுத் தீ மொத்த நகரத்தையே நாசமாக்கிவிட்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் காட்டுத் தீக்கு பெயர் போனது குறிப்பிடத்தக்கது. வருடத்தில் அதிக நாட்கள் காட்டுத் தீயால் பாதிக்கப்படுவது வழக்கம். முக்கியமாக சாண்டா ரோசா நகரத்தில் காட்டுத் தீ அடிக்கடி ஏற்படும். ஆனால் தற்போது மிக மோசமாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு பெரிய அளவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
ஒரு வாரமாக காட்டுத் தீ தொடர்ச்சியாக பரவிக் கொண்டிருக்கிறது. 25க்கும் அதிகமான பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைகள், பள்ளிகள், கடைகள் என நகரத்தின் முக்கிய பகுதிகள் மற்றும் குடியிருப்புகள் மொத்தாமாக அழிந்துவிட்டது.
கலிபோர்னியாவின் மொத்த செயல்பாடும் நின்று போய் உள்ளது. இந்நிலையில் கலிபோர்னியாவின் தீயணைப்பு துறையும், வானியல் துறையும் சேர்ந்து அதிர்ச்சியளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், காற்றின் ஈரப்பதம் மிகவும் குறைந்துள்ளதாகவும், இதையடுத்து அந்த பகுதியில் பருவநிலை திடீரென மாறும் என்றும் தெரிவித்துள்ளனர்.