பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரின் செல்போன் திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடி நிலவுவதற்கு இம்ரான் கான் அரசே காரணம் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மான கொண்டு வந்தன.
இதில், இம்ரான் கான் அரசு கழிந்தது. எனவே, அவர் பிரதமர் பதவியில் இருந்து பறிக்கப்பட்டதும் தனது கட்சி சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார். ஏற்கவே கடந்த 14 ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலலந்துகொண்ட அவர், தன்னைக் கொல்லை சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி பரபரப்பு ஏற்படுத்தினார்.
அவரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியவர்கள் யார் என்பது குறித்த வீடியோவை பதிவு செய்து வைத்துள்ளதாக அவர் கூறிய நிலையில் அந்த வீடியோ பதிவு செய்து வைத்திருந்த செல்போன் திருடுபோனதாக இம்ரான் கானில் முன்னாள் உதவியாளர் ஷாபாஸ் கில் கூறியுள்ளார்.
இம்ராங்கான் சியால்கோட் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு இஸ்லாமாபாத் திரும்புவதற்காக சசியால்கோட் விமான நிலையத்திற்கு வந்தபோது, அவரது செல்போன் திருடப்பட்டதாக ஷாபாஸ் தெரிவித்துள்ளார்.