கூகுள் மீட் தளத்தின் மூலம் இரண்டு நிமிடம் மீட்டிங் நடத்தப்பட்டதாகவும் மீட்டிங் முடிந்த அடுத்த வினாடி 200 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
அமெரிக்காவை சேர்ந்த Front Desk என்ற தொழில்நுட்ப நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக லாபம் குறைவாக பெற்று வந்ததாக கூறப்பட்டது. இதற்கு ஊழியர்கள் சரியான முறையில் வேலை செய்யவில்லை என்று நிர்வாகம் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் ஊழியர்கள் சரியாக பணிபுரிய வேண்டும் என்று அறிவுறுத்துவதற்காக கூகுள் மீட் மூலம் மீட்டிங் நடத்தப்பட்டது. இந்த மீட்டிங் 2 நிமிடம் மட்டுமே நடந்ததாகவும் இந்த மீட்டிங்கில் 200 ஊழியர்கள் பணி செய்ய பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டது.
லாபத்தை பெருக்க தவறியதால் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பை நிர்வாகம் வெளியிட்டதால் ஊழியர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.