Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை தான் கடைசி தினம்: ஜிமெயில் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு..!

நாளை தான் கடைசி தினம்: ஜிமெயில் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு..!
, புதன், 29 நவம்பர் 2023 (16:10 IST)
டிசம்பர் 1ஆம் தேதி முதல் பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில் கணக்குகளை முடக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளதை அடுத்து நாளை கடைசி தினம் என்பதால் ஜிமெயில் வைத்திருப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
கடந்த மே மாதம் கூகுள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பயன்படுத்தப்படாத கணக்குகள் அதாவது இரண்டு வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும் என்று அறிவித்திருந்தது. 
 
அதன்படி பயன்பாட்டில் இல்லாத கூகுள் கணக்குகள், ஜிமெயில்கள், யூடியூப் சேனல்கள் அனைத்தும் நீக்கப்படும் வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கணக்குகளை நிரந்தரமாக  நீக்க உள்ளதாக கூகுள் அறிவித்துள்ள நிலையில் இந்த பணியை டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடங்க உள்ளது. 
 
எனவே கூகுள் பயனர்கள் நாளைக்குள் தங்கள் கணக்குகளில் உள்ள  கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து ஒரு முறையாவது உள்ளீடு செய்து தங்கள் கணக்குகளை காப்பாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.  இது தொடர்பாக கூகுள் அனைத்து ஜிமெயில் கணக்குகளுக்கும் எச்சரிக்கை செய்தியையும் அனுப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் டூப்பர் சிறப்பம்சங்களுடன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்! – Redmi 13C விரைவில்..!