தான் குடியுரிமை அளவில் அமெரிக்கனாய் இருந்தாலும் தன்னுள் இந்தியா ஆழ பதிந்துள்ளதாக கூகிள் சிஇஓ சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக சமூக வலைதளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த கூகிள் சிஇஓ சுந்தர் பிச்சை “நான் குடியுரிமை அளவில் அமெரிக்கனாய் இருந்தாலும் என்னுள் இந்தியா ஆழமாக உள்ளது. நான் என்பதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ”சமூக வலைதளங்களில் சுதந்திரம் இருக்க வேண்டியது அவசியம். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. கூகிள் ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டு சட்டத்திட்டப்படி முறையாக செயல்படுகிறது” என கூறியுள்ளார்.