Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லோகோவை மாற்றிய கூகுள்.. இனிமேல் தனித்தனியாக கிடையாது..!

Advertiesment
கூகுள்

Mahendran

, புதன், 14 மே 2025 (12:13 IST)
கூகுள் நிறுவனம் தனது லோகோவில் ஒரு சிறிய மாற்றத்தை செய்துள்ளது. அதன் பழைய லோகோவில் இருந்த நான்கு நிறங்களான சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் தனித்தனியாக இருந்தன. தற்போது அந்த நான்கு நிறங்களும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனங்களில் ஒன்றான கூகுள், 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் தனது லோகோவில் இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. பழைய லோகோவில் சின்ன சின்ன பெட்டிகளாக நிறங்கள் தென்பட்டன. ஆனால் தற்போது, அந்த நிறங்கள் ஒட்டியிருக்கின்றன என்ற உணர்வை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
 
கூகுள் தொடர்ந்து ஏஐ  அம்சங்களை அறிமுகப்படுத்தி வருவதால், இந்த புதிய லோகோ உருவாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த புதிய லோகோ, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் விரைவில் மாற்றி காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
இருப்பினும், கூகுளின் முக்கிய சொல் அடையாளத்தில் (Google எனும் பெயர் வடிவத்தில்) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கூகுள் செயற்கை நுண்ணறிவுக்கு  முன்னுரிமை அளித்து வருகின்றதால், எதிர்காலத்தில் மேலும் சில மாற்றங்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
கடைசியாக 2015 ஆம் ஆண்டு, கூகுள் தனது லோகோவில் மாற்றம் செய்தது. அதன் 10 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் லோகோவில் மாற்றம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லோன் ஆப் நெருக்கடி.. தாயிடமே தங்க செயினை பறித்த மகன்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!