Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஜெய்லுக்கு போய்ரலாம்... தாய்லாந்தில் புலம்பி தள்ளும் ராஜபக்சே!

ஜெய்லுக்கு போய்ரலாம்... தாய்லாந்தில் புலம்பி தள்ளும் ராஜபக்சே!
, செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (14:03 IST)
கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப முடியாததால் விரக்தியிலும் புலம்பி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. 
 
இலங்கையில் மிகப் பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடித்ததை அடுத்து இலங்கையில் இருந்து தப்பித்து சிங்கப்பூர் சென்ற கோத்தபய ராஜபக்சே அங்கிருந்தபடியே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். ஒரு மாதம் சிங்கப்பூரில் இருந்த அவர் தற்போது தாய்லாந்துக்கு தஞ்சம் புகுந்து உள்ளார். 
 
தாய்லாந்து அரசு கோத்தபாய ராஜபக்சவை தற்காலிகமாக தங்க அனுமதித்துள்ளது என்றும், அதிகபட்சமாக 90 நாட்கள் அவர் தங்குவதற்கு அனுமதி வழங்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில் 90 நாட்களுக்குள் வேறு நாட்டிற்கு அவர் செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால் வேறு நாட்டை தேடுவதில் அவரது தரப்பினர் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமாக கோத்தபய ராஜபக்சே சுவிட்சர்லாந்து செய்யவாய் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு ஓட்டலில் கோத்தபய ராஜபக்சே தங்கி உள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக ஓட்டல் அறையிலேயே இருக்கும் படியும், வெளியில் வர வேண்டாம் என்றும் கோத்தபய ராஜபக்சேவிடம் தாய்லாந்து போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.இதனால் ஓட்டல் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்கிறார். 
 
கோத்தபய ராஜபக்சே, ஓட்டல் அறைக்குள்ளேயே இருப்பது ஜெயிலில் உள்ளது போல் இருப்பதாகவும் நாடு திரும்ப முடியாததால் விரக்தியிலும் புலம்பி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 மாதங்களுக்குள் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!