அமெரிக்காவின் ஆளுகைக்குட்பட்ட ஹவாய் தீவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஆளுகைக்குட்பட்ட தன்னாட்சி பிராந்தியமாக பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு ஹவாய். எரிமலை தீவான ஹவாயில் அவ்வபோது நிலநடுக்கம் போன்றவையும் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஹவாய் தீவிலுள்ள கடற்கடை பகுதியான நாலேஹேவுக்கு தெற்கே 17 மைல் தொலைவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சில மணி நேரங்கள் கழித்து மீண்டும் அதே பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதுடன், பொருட்களும் விழுந்து உடைந்துள்ளன. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பதுடன், சுனாமி எச்சரிக்கையும் அறிவிக்கப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.