இஸ்ரேல் - ஹெஸ்புல்லா இடையே போர் நடந்து வரும் நிலையில் ஹெஸ்புல்லா அமைப்பின் மற்றுமொரு முக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளதை ஹெஸ்புல்லா அமைப்பு ஒத்துக் கொண்டுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் இடையே கடந்த ஓராண்டாக போர் நடந்து வரும் நிலையில், ஹமாஸுக்கு ஆதரவாக ஹெஸ்புல்லாவும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் களம் இறங்கியது. லெபனானில் இருந்து ஹெஸ்புல்லா படைகள் தாக்கி வரும் நிலையில் இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது.
அதேசமயம் ஹெஸ்புல்லா அமைப்பை இயக்கும் முக்கிய தலைவர்களின் பதுங்கு தளங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வாறாக ஹெஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவரான ஹசன் நஸ்ரல்லா கடந்த மாதம் கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து ஹெஸ்புல்லாவை வழிநடத்தக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ள தளபதிகள் சிலரையும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி கொன்றது.
இந்நிலையில் ஹெஸ்புல்லாவின் அடுத்த தலைவராக முன்னாள் தலைவர் ஹஸ்ரல்லாவில் நெருங்கிய உறவினரான ஹசீம் சபிதீன் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியானது. அதை தொடர்ந்து லெபனானில் பெய்ரூட் பகுதியில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், இந்த தாக்குதலில் சபிதீன் பலியானதாக அறிவித்தது. ஆனால் இதுகுறித்து ஹெஸ்புல்லா உறுதிப்படுத்தாமல் இருந்து வந்த நிலையில், தற்போது சபிதீன் கொல்லப்பட்டதை ஹெஸ்புல்லாவும் ஒத்துக் கொண்டுள்ளது.
Edit by Prasanth.K