இந்தியாவில் பெரிதாக ஏதோ நடக்கப்போகிறது என ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்யும் நிறுவனம் ஹிண்டன்பர்க் என்பதும் இந்நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் அதானி குழு நிறுவனங்கள் மீது கூறிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் இன்று ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் இந்தியாவில் ஏதோ ஒன்று பெரிதாக நடக்கப்போகிறது என்று குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்தியாவின் ஒரு நிறுவனம் குறித்த மோசடிகள் மற்றும் முறைகேடுகளை வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் அதானி குழுமத்தில் முறைகேடு நடப்பதாக கூறிய நிலையில் அதானி குழும பங்குகள் திடீரென குறைந்தது.
ஆனால் அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என அதானி மறுத்த நிலையில் மீண்டும் அதானி குழும பங்குகளின் விலை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் ஹிண்டன்பர்க் வேறு எந்த நிறுவனம் மீது குற்றச்சாட்டை முன்வைக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.