இந்தியா முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவும் நிலையில் ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பல மாநிலங்களில் இருந்து வாகனங்கள் வழியாக ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு காரணமாக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டும் உள்ளது. தற்போது ஆக்ஸிஜனுக்கு பரவலாக தேவை உள்ளதால் மாநில அரசுகள் ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்த வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சக்ம் மாநில அரசுகளிடம் வலியுறுத்தியுள்ளது.