Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இலங்கை அரசு விழாவில் மனித வெடிகுண்டு: ஆதாரத்துடன் அம்பலமான போட்டோ

இலங்கை அரசு விழாவில் மனித வெடிகுண்டு: ஆதாரத்துடன் அம்பலமான போட்டோ
, வியாழன், 25 ஏப்ரல் 2019 (16:18 IST)
இலங்கை அரசிடம் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விருது விழாவில் பங்கேற்ற நபர் ஒருவர், இன்று அந்நாடு சின்னாப்பின்னமாகி இருப்பதற்கு காரணமாக இருந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு பகுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலுக்கு இதுவரை 359 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். மேலும் 500 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  
 
மெளலவி சஹ்ரான் ஹாசீம் என்கிற பயங்கரவாதி தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்புதான் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஹாசீம் இளைஞர்களை மனித வெடிகுண்டாக மாற்ற மூளைச்சலவை செய்து பலரை அவர் வசம் வைத்துள்ளார். 
webdunia
அப்படி மாறிய இளைஞர்கள் தொழிலதிபர் இப்ராஹிம் என்பவரது மகன்கள். இந்த இப்ராஹிமுக்கு 2016 ஆம் ஆண்டு இலங்கை அரசு சிறந்த ஏற்றுமதியாளர் விருதை வழங்கியுள்ளது. இந்த விழாவில் மனித வெடிகுண்டாகி மரணித்துப் போன தீவிரவாதியும் பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தககது. இந்த புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்பரப்பி சம்பவத்துக்குக் காரணம் யார் ? – கிருஷ்ணசாமி விளக்கம் !