இந்தோனேஷியாவில் பூங்கா பராமரிப்பாளரை கொன்று விட்டு தப்பிய புலிகள் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் சிங்கா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு அழிந்து வரும் சுமத்ரா இன புலிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்கு சில நாட்களாக மழை பெய்து வந்ததால் புலிகளின் வசிப்பிடம் சேதமடைந்திருந்தது. அதை சரிசெய்ய பூங்கா பராமரிப்பாளர் சென்றபோது திடீரென இரண்டு பெண் புலிகள் அவரை தாக்கி விட்டு தப்பியுள்ளன.
புலிகள் கடித்து குதறியதில் பராமரிப்பாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் அந்த இரண்டு புலிகளில் ஒன்றை பாதுகாப்பாக பிடித்த நிலையில், மற்றொரு புலி மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததால் அதை சுட்டுக் கொன்றுள்ளனர். அரியவகை புலி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.