இந்திய சுற்றுலா பயணிகள் இல்லாததால் பொருளாதார வீழ்ச்சி.. சம்பளத்தை குறைக்கும் மாலத்தீவு..!
, வெள்ளி, 25 அக்டோபர் 2024 (11:24 IST)
இந்தியாவிலிருந்து மாலத்தீவுக்கு செல்லும் சுற்றுலா பயணங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, மாலத்தீவு பொருளாதார சவால்களை சந்தித்துள்ளதாகவும், இதைத் தொடர்ந்து அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க மாலத்தீவு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய எதிர்ப்பு போக்கை மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் கடந்த சில ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்த நிலையில், அதிரடியாக இந்திய சுற்றுலா பயணிகள் மாலத்தீவுக்கு செல்வதை நிறுத்தியுள்ளனர். இந்திய சுற்றுலா பயணிகளின் வருகையையும் வருமானத்தையும் மட்டுமே நம்பி இருந்த மாலத்தீவு, தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.
இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டும் தேவையான அத்தியாவசிய செலவுக்கு மட்டுமே கருவூலத்தில் பணம் இருப்பதாகக் கூறப்படுகின்ற நிலையில், மாலத்தீவு அரசு சிக்கன நடவடிக்கைகளை தேர்ந்தெடுத்து வருகிறது.
2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் போது அரசின் செலவினங்களை குறைக்கவும், குறிப்பாக அரசு ஊழியர்களின் சம்பளத்தை 10 சதவீதம் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக, தனது 50 சதவீத சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக மாலத்தீவு அதிபர் முன்வந்தார். இந்தியாவிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்தால் மட்டுமே மாலத்தீவு நிலைமை சீராகும்; இல்லையெனில் நிலைமை இன்னும் மோசமாகும் எனக் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்