Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

டிரம்ப் வெற்றிக்கு பின் லட்சக்கணக்கில் எக்ஸ் தளத்தை விட்டு வெளியேறிய பயனர்கள்.. என்ன காரணம்?

elan twitter

Mahendran

, வியாழன், 14 நவம்பர் 2024 (10:23 IST)
சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவரது வெற்றிக்கு மிகப்பெரிய உதவியாக எலான் மஸ்க் இருந்தார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் எலான் மஸ்க் தனது செல்வாக்கை பயன்படுத்தியதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது டிரம்ப் வெற்றிக்குப் பிறகு, எக்ஸ் தளத்திலிருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.

டிரம்ப் வெற்றிக்கு அடுத்த நாளிலிருந்து, எக்ஸ் தளத்தை பயன்படுத்தும் சிலரின் கணக்குகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக டிஜிட்டல் நுண்ணறிவு தளம் ஒன்றின் தகவல் வெளிவந்துள்ளது. மொபைல் செயலி மூலம் எக்ஸ் தளத்தை பயன்படுத்தி வெளியேறிவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ப்ளூ ஸ்கை என்ற சமூக ஊடகத்தின் பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே வாரத்தில் 10 லட்சம் புதிய பயனர்கள் இந்த தளத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ப்ளூ ஸ்கையின் மொத்த பயனர்கள் எண்ணிக்கை ஒன்றரை கோடியை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எக்ஸ் தளத்திலிருந்து வெளியேறிய தி கார்டன் என்ற செய்தி நிறுவனம், அதிபர் தேர்தலில் எலான் மஸ்க் தலையீடு செய்தது கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளது.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நமது கனவுகளைக் குழந்தைகள் மேல் ஏற்ற வேண்டாம்: முதல்வரின் குழந்தைகள் தின வாழ்த்து..!