Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளிடம் இன்னும் எதிர்பார்த்தேன் – இம்ரான் கான் பேச்சு !

Webdunia
சனி, 14 செப்டம்பர் 2019 (13:29 IST)
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியதை அடுத்து உலக நாடுகள் கூடுதலாக எதிர்வினையாற்றி இருக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் 370 சிறப்புப் பிரிவை நீக்கியதைப் பாகிஸ்தான் கடுமையாக கண்டித்து வருகிறது. இது குறித்து உலக அளவில் கவனத்தை ஈர்க்க முயன்று வருகிறது. ஆனால் இந்தியாவோ எங்கள் உள் விவகாரங்களில் வேறு எந்த நாடும் தலையிட முடியாது எனக் கூறியுள்ளது.

இதையடுத்து இப்போது ரஷ்யா சென்றிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ‘இந்தியா காஷ்மீரில் எடுத்த நடவடிக்கைகளில் உலக நாடுகள் இன்னும் கூடுதலாக எதிர்வினையாற்றும் என நான் எதிர்பார்த்தேன். இந்த விஷயத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே பிளவு அதிகரித்தால் அது அணுசக்தி வைத்துள்ள இரு நாடுகள் எதிர்காலத்தில் நேருக்கு நேர் மோதும் சூழலை உருவாக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.

மோடியும் இம்ரான் கானும் செப்டம்பர் 27 ஆம் தேதி அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஐக்கிய நாடுகள் அமர்வில் அடுத்தடுத்து பேச உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

விஜய் அரசியல் வருகையால் தேமுதிகவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. தொடங்கியது பேச்சுவார்த்தை..!

ஆடை அணியாமல் திருமணம் செய்த 29 ஜோடிகள்.. வினோத நிகழ்வு..!

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments