பாகிஸ்தானின் பொருளாதாரம் நிலைமை மோசமாகி கொண்டிருப்பதாகவும் விரைவில் இலங்கை நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் முன்னால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஜெயிலில் நிருபர்களிடம் உரையாடிய போது என்னுடைய அனைத்து கணிப்புகளும் உண்மையாகவே கடந்த காலத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளன
அந்த வகையில் பாகிஸ்தானின் நிதிநிலை தற்போது மிகவும் மோசமாக உள்ளது, சர்வதேச நாணய நிதியக்கத்திடம் இறுதியாக ஒரு கடன் தொகையை பாகிஸ்தான் கேட்டு பெற உள்ள சூழலில் பணவீக்கத்தில் புதிய அலை தோன்றுகிறது
இதனால் மக்கள் தெருக்களில் இறங்கி போராடும் நிலை ஏற்படும். இலங்கையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையில் மக்கள் நீதிக்கு வந்து போராடியது போல் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் அதிபருக்கு எதிராகவும் போராட்டம் நடைபெற அதிக வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்