Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் வேலை கிடைக்காமல் நாடு திரும்பிய இந்திய விவசாயிக்கு கிடைத்த ரூ.28 கோடி!

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (09:00 IST)
துபாயில் வேலை கிடைக்காமல் சோகமாக நாடு திரும்பிய இந்திய விவசாயி ஒருவருக்கு துபாய் லாட்டரி டிக்கெட் மூலம் ரூபாய் 28 கோடி ரூபாய் கிடைத்துள்ளது 
 
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த விலாஸ் ரிக்காலா என்ற விவசாயி துபாயில் டிரைவர் வேலை செய்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் சென்றார். அங்கு பெரும் முயற்சி செய்து வேலை தேடியும் அவருக்கு டிரைவர் வேலை கிடைக்கவில்லை. அதன் பின்னர் வேறு வழியின்றி 45 நாட்களுக்கு பின்னர் நாடு திரும்பினார். சொந்த கிராமத்தில் ஒரு சிறிய நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்
 
இந்த நிலையில் துபாயில் அவர் வேலை தேடும் போது வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ 20 கோடி பரிசு விழுந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம் மூலமும் டிரைவர் பணியின் மூலமும் குறைந்த வருவாய் பெற்று வந்த விலாஸ் ரிக்காலா தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ளார்
 
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'எனது மனைவி பத்மா தான் இதற்கான முக்கிய காரணம். துபாயில் இருந்து வீட்டுக்கு திரும்பி வரக்கூட என்னிடம் பணம் இல்லை. எனினும், லாட்டரி டிக்கெட் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதனால், மனைவியின் சேமிப்பில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் கேட்டுப்பெற்று அந்த பணத்தில்தான் இந்த லாட்டரி சீட்டை வாங்கினேன் என்று கூறியுள்ளார்.  
 
துபாயில் நடைபெறும் லாட்டரியில் இந்தியர்கள் பரிசு தருவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே ஒரு சிலர் கோடிக்கணக்கான ரூபாய் லாட்டரி சீட்டு மூலம் பரிசு பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் இந்திய மாணவி ஒருவருக்கு சுமார் 7 கோடி ரூபாயும், அதே மாதத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ 27 கோடி ரூபாயும் துபாய் லாட்டரி பரிசு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments