இந்தோனேஷியா ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 189 பேரும் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியா ஜகார்த்தாவில் இருந்து நேற்று காலை 6.20 மணிக்கு லயன் ஏர் நிறுவனத்தின் போயிங் 737 பயணிகள் விமானம் 6 பணிப்பெண்கள், 2 விமான ஓட்டிகளுடன் சேர்த்து 189 பேருடன் பங்கல் பினாங் தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்ட 13வது நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனையடுத்து விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு அதற்காக வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. சற்று நேரத்தில் விமானம் பெரும் விபத்துக்குளாகி விமானத்தின் பாகங்கள் ஜாவா கடற்கரையில் மிதப்பதாக தகவல்கள் வெளியாகினது.
விபத்துள்ளானவர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது. அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என மீட்புப் படையினர் சொல்லி வந்த நிலையில், விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.