இந்தோனேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா தீவில் உள்ள புகிதங்கி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல வீடுகள், கட்டிடங்கள் குலுங்கிய நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 10 பேர் இதுவரை பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ள நிலையில் மேலும் சில நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என்பதால் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.