2023 ஆம் ஆண்டில் அதிகமாக அன்-இன்ஸ்டால் செய்யப்பட்ட இரண்டு செயலிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் இரண்டுமே பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது
பேஸ்புக் அலுவலகத்திற்கு சொந்தமாக இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட்ஸ் ஆகிய இரண்டு செயலிகள் உள்ளன. கடந்த ஜூலை மாதம் பேஸ்புக் நிறுவனம் த்ரெட்ஸ் என்ற செயலியை அறிமுகம் செய்த நிலையில் இந்த செயலியை ஐந்து நாட்களில் 10 கோடி பேர் இன்ஸ்டால் செய்தனர்.
ஆனால் ஒரு சில மாதங்களில் இந்த செயலியை பலர் அன்இன்ஸ்டால் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டில் அதிகமாக அன்இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலி த்ரெட்ஸ் என்று கூறப்படுகிறது.
அதேபோல் பேஸ்புக்கில் நிறுவனத்திற்கு சொந்தமான இன்னொரு செயலியான இன்ஸ்டாகிராம் 2023 ஆம் ஆண்டில் அதிகமாக அன்-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு செயலிகள் தவிர ஸ்னாப் ஷாட் செயலியும் அதிகமாக அன்இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது