பெட்ரோல் போட தேவையில்லை பீர் ஊற்றினால் பைக் ஓடும் என்று அமெரிக்க இளைஞர் ஒருவரின் புதிய கண்டுபிடிப்பு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மின்னசொட்டா என்ற மாகாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் எரிவாயு இயங்கும் இயந்திரத்துக்கு பதிலாக பீர் ஊற்றும் பைக்கை கண்டுபிடித்துள்ளார். பீர் ஊற்றினால் பைக்கின் இயந்திரம் வெப்பம் அடையும் என்றும், அதில் ஏற்படும் நீராவி மூலம் பைக் இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பைக்கில் உள்ள இயந்திரத்தில் பீரை ஊற்றும்போது 300 டிகிரி வரை சூடாகிறது என்றும் அது பைக்கை முன்னோக்கி செல்வதற்கு தேவையான நீராவியை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த பைக் மூலம் சுமார் 150 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும் என்று கூறிய அவர் எரிவாயு விலைக்கு மாற்றாக இந்த பைக்கை உருவாக்கினேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் எரிவாயு விலைக்கு இணையாக பீர் விலையும் இருக்கும் நிலையில் இது எப்படி குறைந்த செலவில் ஓட்டும் பைக்காக எடுத்துக் கொள்ள முடியும் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.