Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதுக்குதான் பொய்யை பரப்பினார்களா? சரிந்த ரஃபேல் பங்குகள்! சீன போர் விமான பங்குகள் உயர்வு!

Advertiesment
Rafael

Prasanth Karthick

, புதன், 14 மே 2025 (11:18 IST)

இந்தியாவின் ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறி வரும் நிலையில் ரஃபேல் விமான பங்குகள் சரிவை சந்தித்துள்ளது.

 

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்ட நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கியது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்த 3 ரஃபேல் விமானங்கள் உட்பட பல விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறி வந்தது. ஆனால் பாகிஸ்தானின் இந்த தகவல் பொய் என்று இந்தியா மறுத்தது.

 

அதேசமயம் இந்திய தரப்பில் ஏற்பட்டுள்ள இழப்பீடுகள் குறித்து தற்போது தெரிவிக்க இயலாது என இந்திய ராணுவம் கூறியுள்ளது.

 

இந்த செய்தியின் எதிரொலியாக பிரான்ஸை சேர்ந்த ரஃபேல் விமானங்களை தயாரித்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் பங்குகள் 10 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளன. அதேசமயம் சீன போர் விமான தயாரிப்பு நிறுவனமான செங்டு விமான கார்ப்பரேஷனின் பங்குகள் ஏற்றமடைந்துள்ளன. இதற்காகதான் ரஃபேலை சுட்டு வீழ்த்தியதாக தகவல் பரப்பினார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அருணாச்சல பிரதேச பகுதிகளின் பெயரை மாற்றும் சீனா.. இந்தியா பதிலடி..!