போரை தீவிரப்படுத்த போவதால் காசாவில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்களுக்கு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் போர் மிகவும் தீவிரமாகும் என்பது உறுதியாகியுள்ளது.
மேலும் ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ள பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
முன்னதாக காசாவில் இருந்து இஸ்ரேல் நாட்டின் மீது பொழிந்த ராக்கெட் மழை பொழிந்ததாகவும், 20 நிமிடத்தில் இஸ்ரேல் மீது ஏவப்பட்ட 5000 ராக்கெட்டுகள் காரணமாக இஸ்ரேலுக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் தெற்கு, மத்திய பகுதிகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு சைரன் மூலம் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஹமாஸ், இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக கூறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.