Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 969 பேர் மரணம்: கைமீறி போனதா இத்தாலி?

Webdunia
சனி, 28 மார்ச் 2020 (07:37 IST)
ஒரே நாளில் 969 பேர் மரணம்
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் உள்ள மனிதகுலம் பெரும் அச்சத்தில் இருந்து வரும் நிலையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரஸால் உயிரிழந்து வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கினாலும் தற்போது அமெரிக்கா மற்றும் இத்தாலியை கொரோனா கடுமையாக பாதித்து வருகிறது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் இத்தாலியில் மட்டும் 969 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. இதனை அடுத்து இத்தாலியில் மட்டும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதுமட்டுமின்றி 80 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும் ஒரு ஆறுதல் செய்தியாக நேற்று மட்டும் சுமார் 11,000 பேர் வரை கொரோனா வைரஸிலிருந்து முழுமையாக குணம் அடைந்து உள்ளனர் என்பதும் மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தாலியில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் நிலைமை கைமீறி போனதாகவே கருதப்படுகிறது. 
 
அதேபோல் அமெரிக்காவிலும் மிக மோசமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா பாதித்ததோரின் எண்ணிக்கை ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது என்பதும் கொரோனாவால் 1,545 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments