இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்த்தாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் 30 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தோனேஷியாவின் கடலொர நகரமான ஜகார்த்தா ‘மூழ்கும் நகரம்’ என பெயர்பெற்றது. ஆண்டு தோறும் கொஞ்சம் கொஞ்சமாக கடலில் மூழ்கி வரும் இந்த நகரம் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்தோனேஷிய பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் ஜகார்த்தா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கனமழையால் ஏற்பட்ட விபத்தில் 21 பேர் இதுவரை இறந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். இவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.