Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- குழந்தை உள்பட 3 பேர் பலி

Webdunia
திங்கள், 18 ஜூன் 2018 (14:37 IST)
ஐப்பானில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கதால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
 
ஜப்பானில் உள்ள கியோடா, ஒசாகா பகுதிகளில் இன்று காலை 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பதறி அடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
 
இந்த நிலநடுக்கத்தால் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மாணவி ஒருவர், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் ஒருவர் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
 
நிலநடுகத்தின் காரணமாக அங்கு விமான சேவைகள், ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள பல பகுதிகளில் மின்சார, துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments