2023ல் நிலவுக்கு செல்ல உள்ளதாக அறிவித்த ஜப்பான் கோடீஸ்வரர் தற்போது முதற்கட்டமாக விண்வெளி புறப்பட்டு சென்றுள்ளார்.
விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி பயணங்கள் கமர்ஷியல் ஆகி வரும் நிலையில் பணக்காரர்கள் பலர் விண்வெளி சென்று வர விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஜெப் பெசோஸ் உள்ளிட்ட சில பணக்காரர்கள் விண்வெளிக்கு சென்று வந்தனர்.
இவர்களை தொடர்ந்து ஜப்பானின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான யுசாகு மெசாவா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி சுற்றுலா புறப்பட்டுள்ளார். ஜப்பானின் மிகப்பெரும் ஆன்லைன் வர்த்தக தளமான ”சோசோடவுன்” நிறுவனத்தின் நிறுவனரான இவர் ஏற்கனவே 2023ம் ஆண்டில் நிலவுக்கு செல்ல உள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அதற்கு முன்னோட்டமாக நேற்று ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டருடன் இணைந்து 12 நாள் பயணமாக விண்வெளி சென்றுள்ளார். அவருடன் அவரை புகைப்படங்கள் எடுப்பதற்காக உதவியாளர் ஒருவரையும் அழைத்து சென்றுள்ளார்.