அமெரிக்காவில் ஒமிக்ரான் அதிகரித்து வரும் நிலையில் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு விமான சேவைக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவ தொடங்கிய வீரியமடைந்த கொரோனா வேரியண்டான ஒமிக்ரான் தற்போது பல நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. முக்கியமாக அமெரிக்காவில் ஒமிக்ரான் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால் தென் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தென் ஆப்பிரிக்க நாடுகளான போட்ஸ்வானா, தென்ஆப்பிரிக்கா, மொசாம்பிக், ஜிம்பாப்வே, நமீபியா, எஸ்வாடினி, லெசோதோ மற்றும் மாளவி ஆகிய நாடுகளுக்கு விதித்த தடையை தளர்த்தி விமான சேவைக்கு அனுமதி அளித்துள்ளார்.