உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க தயார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ரஷ்ய அதிபர் புதின் உண்மையிலேயே விரும்பினார் என்றால் அவரை சந்திக்க தயார் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்
மேலும் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும் பிரான்சும் தொடர்ந்து உக்ரைனை ஆதரிக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்
இந்த நிலையில் அமெரிக்க அதிபரின் இந்த பேச்சுக்கு ரஷ்ய செய்தி தொடர்பாளர் கருத்து கூறியபோது, சமரச பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இருப்பதாக ஜோ பைடன் கருதினால் என்றால் அதற்கு ரஷ்யாவும் தயார் என்றும் ஆனால் அதே நேரத்தில் அதற்கு முன்பாக உக்ரைனை விட்டு ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் என்று நிபந்தனை விதித்தால் அந்த நிபந்தனையை ரஷ்யா ஒருபோதும் ஏற்காது என்றும் தெரிவித்துள்ளார்.