கடந்தசில மாதங்களாக உலகம் முழுவதும் பெரும் உன்னிப்பாய்க் கவனித்து வந்த நிகழ்வு அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தல்தான். இந்நிலையில் இத்தேர்தலில் அமெரிக்க வரலாற்றிலேயே அதிக மக்களின் வாக்குகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சிசார்பில் போட்டியிட்ட ஜோ பிடன்.
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் ஜோ பிடனும், துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கமலா ஹாரிசும் சுமார் 7.2 கோடி வாக்குகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்புக்கு சுமார் 6.86 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர்.
டிரம்புக்கும் ஜோ பிடனுக்கும் இடையே கடுமையாக பிரச்சாரமும் போட்டியிடும் நிலவிய நிலையில் இந்த வெற்றியால் ஜோ பிடனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இதற்கு முன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஒபாமாவுக்கு 6.95 கோடி மக்கள் வாக்குகள் பெற்று சாதனை படைத்தார். இதுவே அதிக வாக்குகள் பெற்ற சாதனை என்றிந்த நிலையில், தற்போது ஜோ பிடன் அதைவிடக் கூடுதலாக 26 லட்சம் வாக்குகள் பெற்று வரலாற்றுச் சாதனைபடைத்துள்ளார்.