காபூல் விமான நிலையத்துக்கு அமெரிக்க குடிமக்கள் வரவேண்டாம் என அமெரிக்க தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் மக்கள் வேகவேகமாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடந்த வெடிக்குண்டு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 100 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ட்ரோன் மூலம் நடந்த தாக்குதலில் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காபூல் விமான நிலையத்துக்கு இன்னமும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், அமெரிக்க குடிமக்கள் காபூலுக்கு வரவேண்டாம் என எனவும் அமெரிக்க தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் ஆப்கானில் சிக்கியுள்ள அமெரிக்க மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.